விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட்


 
அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.

விண்டோஸ் 10-ன் மாதிரி பதிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும், விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் அனுமதியில்லாமல் விண்டோசை பயன்படுத்துபவர்களை நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துள்ளது.

இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் கணனி மற்றும் செல்பேசிக்கான இந்த இயங்குதளத்தின் மாதிரி தோற்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் இயங்குதளமானது பெரும்பாலும், பணம் செலுத்தாமல் திருட்டு மென்பொருட்களாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment