ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட்களில் திரையில் தெரிவதை புகைப்படமாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது வெகு சுலபமான காரியம் ஆகும். இது ஆண்ட்ராய்ட் பதிப்புகளுக்கு ஏற்றவாறு வேறுபடும். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர்ப்ரெட் (Gingerbread 2.3):
மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Home பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.
ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் (Icecream Sandwich 4.0), ஜெல்லிபீன் (Jelly Bean 4.1):
மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Volume Down பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.
அவ்வளவு தான்! ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் போது அறிவிப்பிற்காக சின்ன சத்தம் ஏற்படும்.

0 comments :
Post a Comment