லேப்டாப் பராமரிக்கும் முறைகள் !!


நீங்கள் உங்கள் Laptop-ஐ பாதுகாப்பாக நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா? எந்த நேரமும் லேப்டாப் பராமரிப்பு பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? எப்படி முழுமையான பாதுகாப்பை பெறுவது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு.


சாதாரண Desktop கணினிகளுடன் ஒப்பிடுகையில் லேப்டாப்களின் பராமரிப்பு அத்தியாவசியமானதும் சிறிது கடினமானதும் கூட. இன்று அநேகமானோர் லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை கையாள்வதற்கான அடிப்படை வழிகளை கூட பின்பற்றுவதில்லை. அநேகமாக பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை வெளியில் எடுத்துச்சென்றுதான் பாவிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குரிய சரியான பாதுகாப்பை கொடுக்காவிட்டால், அந்த லேப்டாப்பின் பாவனை காலத்தை இழக்கவேண்டி இருக்கும். இங்கு லேப்டாப் பாதுகாப்பிற்கான சில வழிகளை தருகிறேன்.

 Temperature பிரச்சினை

எப்பொழுதும் உங்கள் லேப்டாப் Over Heat ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெப்பமான பிரதேசங்களில் அதிக நேரம் பாவிப்பதையும் தவிருங்கள். இப்படியான சம்பவங்களால் பாட்டரி பழுதடைய கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அதோடு அநேகமான சந்தர்ப்பங்களில் ஹார்ட் டிஸ்க் மற்றும் சில Internal parts ஐயும் பழுதடைய செய்துவிடும். சில வேளைகளிக் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும். ஆகவே லேப்டாப்பை வெளியில் எடுத்து செல்லமுன்னர் சுற்று சூழல் பற்றி அதிக கவனமெடுங்கள்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் (Air conditioned) இருந்து சட்டென சாதாரண வெப்ப நிலையுள்ள பகுதிக்கு எடுத்து வராதீர்கள்.

அப்படி மாறுபட்ட வெப்பநிலையுள்ள பிரதேசத்துக்கு மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டால் லேப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு எடுத்து செல்லுங்கள்.

வெப்பநிலையான பிரதேசங்களில் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக பாவிப்பதை தவிருங்கள் எங்கு சென்றாலும் லேப்டாப்புடன் ஒரு பொலுத்தீன் பையை எடுத்து செல்லுங்கள். பயணங்களின் போது லேப்டாப்பின் மீது நீர் படுவதை தவிர்க்கமுடியும்.
Cool pad ஐ பாவிப்பது நல்லது. 2 மணிநேரத்துக்கு அதிகமாக பாவிக்கவேண்டியிருந்தால் Cool Pad ஐ உபயோகியுங்கள். லேப்டாப்பின் Heat ஐ ஓரளவிற்கு குறைக்கும்
அவன் (Microwave Ovens), டிவிடி ப்ளேயர், டி.வி ஏனைய இலத்திரணியல் உபகரணங்களுக்கு அருகில் லேப்டாப்பை எடுத்து செல்வதை முற்றாக தவிருங்கள். இவற்றில் இருந்து வரும் காந்த சக்தி லேப்டாப்பின் ஹார்ட் டிஸ்கை நிச்சயம் பாதிக்கும்
லேப்டாப்பை ஆஃப் செய்து ஒரு நிமிடத்துக்குள் மறுபடியும் ஆன் செய்யாதீர்கள். ஆகக்குறைந்தது 2 நிமிட இடைவெளியையாவது பேணுங்கள்.

லேப்டாப் மீது நீர் படவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈரத்தன்மை காயும் வரை லேப்டாப்பை ஆன் செய்வதை தவிருங்கள். ஈரத்துடன் ஆன் செய்வதால் short circuit ஏற்பட வாய்ப்புள்ளது.

அளவுக்கதிகமாக லேப்டாப்பை சார்ஜ் செய்யாதீர்கள். ஆரம்பத்தில் AC அடாப்டரை பழுதுபடுத்தும். பின்னர் காலப்போக்கில் லேப்டாப்பின் Internal Parts ஐ பாதிக்கும்
அதிக மழைபொழிவின் போது சார்ஜ் இடுவதை தவிருங்கள். வீட்டில் இருந்தால் UPS மூலம் சார்ஜ் இட முயற்சியுங்கள்.

Battery பாதுகாப்பு

பலர் ஏனைய பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்தினாலும் பாட்டரி விடயத்தில் கவனம் செலுத்த தவறுகின்றனர். இதனால் பாட்டரி குறுகிய காலத்துக்குள்ளேயே செயலிழந்து போகிறது. இதை தடுப்பதற்குலேப்டாப்பை சார்ஜ் செய்யும்போது ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள் சார்ஜ்ஜிங் முழுவதுமாக முடியும்வரை காத்திருங்கள்.

வழக்கமாக 2 தொடக்கம் 3 மணித்தியாலங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்
சூரிய வெளிச்சமுள்ள இடங்களில் பாட்டரியை வெளியே எடுக்காதீர்கள்
லேப்டாப்பையோ அல்லது பாட்டரியையோ வெப்பமுள்ள இடங்களில் வைக்காதீர்கள்.


மேலே குறிப்பிட்டவை Battery-ஐ பாதுகாப்பதற்கான External வழிகள். இப்போது சில Internal முறைகளை பார்ப்போம் Wi-fi, Bluetooth போன்றவற்றை பாவிக்காதபோது ஆஃப் செய்துவிடுங்கள் பாட்டரி சார்ஜ் 50 % இற்கும் குறைவாக இருக்கும்போது High Resolution கொண்ட வீடியோ கேம்ஸ் விளையாடாதீர்கள். இப்படியான கேம்ஸ் பட்டரியை இரு மடங்கு வேகமாக சார்ஜ் ஐ குறைக்கும். USB port பட்டரி Life ஐ குறைக்கும். ஆகவே USB Mouse, Joystick, Pen Drive போன்றவற்றை பாவிக்காத நேரங்களில் அகற்றிவிடுங்கள்.

Laptop Screen ஐ மாத்திரம் off செய்யும் மென்பொருள்களை உபயோகித்து தேவையற்ற நேரங்களில் Screen ஐ off செய்துவிடுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment