ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவுதல்



நீங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தினால் அப்ளிகேசன்கள், கேம்ஸ்களை மொபைலில் நிறுவுவது பற்றி அறிந்திருப்பீர்கள். கணினி மூலம் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவும் வசதியையும் கூகுள் தந்துள்ளது. அது பற்றி பார்ப்போம்.

கூகுள் ப்ளே மூலம் அப்ளிகேசன்களை நிறுவுதல்:

உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலில் எந்த கூகுள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறீர்களோ? அந்த மின்னஞ்சல் கணக்கைக் கொண்டு கூகுள் ப்ளே தளத்தில் (http://adf.ly/1F4iQN) உள்நுழையுங்கள். உங்களுக்கு விருப்பமான அப்ளிகேசன் அல்லது கேம் பக்கத்திற்கு சென்றால் கீழே உள்ளது போல இருக்கும். 


உங்கள் மொபைலுக்கு அந்த அப்ளிகேசன் அல்லது கேம் ஏற்றதா? என்று சொல்லும். ஏற்றதாக இருந்தால் INSTALL பட்டனை அழுத்துங்கள்.


பிறகு அப்ளிகேசன் விலை, கொள்ளளவு, அனுமதிகள் (Permissions) போன்ற  தகவல்களை காட்டும். பார்த்த பிறகு INSTALL என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.


அந்த அப்ளிகேசன் விரைவில் உங்கள் மொபைலில் நிறுவப்படும் என்று சொல்லும். பிறகு OK என்பதை கிளிக் செய்யுங்கள்.



அவ்வளவு தான்! பிறகு உங்கள் மொபைலில் இணைய இணைப்பு கிடைக்கும் போது அந்த அப்ளிகேசன் உங்கள் மொபைலில் தானாக நிறுவப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment