Excel / Word 2007/2010 பயனுள்ள டிப்ஸ்

Excel 2003 பயன்பாட்டில் சரளமாக பணிபுரிந்து விட்டு, கடந்த சில காலங்களாக   Excel 2007 உபயோகிப்பவர்கள், சில சமயங்களில், அவசரமாக ஒரு சில கட்டளைகளை ரிப்பன் மெனுவில் வலைபோட்டு தேடிக் கொண்டிருக்க வேண்டிய நிலை காரணமாக எக்சலில் நல்ல முன் அனுபவம் இருந்தும், இந்த ரிப்பன் மெனுவினால் பெரும் கால தாமதத்திற்கு உள்ளாகிறார்கள். 


இது Excel 2003 பயன்பாட்டில் உள்ள ஒவ்வொரு கட்டளைகளும், Excel 2007 பயன்பாட்டில் எந்த ரிப்பன் மெனுவில் உள்ளது என்பதை விளக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ”Command Workbook" என்ற எக்சல் வொர்க்‌ஷீட்டில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.




மைக்ரோசாப்ட் வேர்டு 2007:-

நாம் Microsoft Word 2007 உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது டெக்ஸ்டை தேர்வு செய்ய ஹைலைட்  செய்தால் தானாகவே Mini Formatting Toolbar தோன்றிவிடும். 

இந்த வசதி சில சமயங்களில் உபயோகமாக இருந்தாலும், பல சமயங்களில் எரிச்சலூட்டுவதாக அமைந்து விடுகிறது. இந்த Mini Formatting Toolbarநிரந்தரமாக நீக்க முடியாதபடி உருவாக்கப் பட்டிருந்தாலும், நாம் டெக்ஸ்டை ஹைலைட் செய்யும் பொழுது இது தானாகவே தோன்றுவதை தடுக்க ஒரு எளிய வழி.

Word 2007 ஐ திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள Office Button ஐ கிளிக் செய்துWord Options க்ளிக் செய்யுங்கள்.





இனி திறக்கும் வசனப் பெட்டியில் Popular பொத்தானை சொடுக்குங்கள். வலது புற பேனில் “Show Mini Toolbar on selection”  என்பதை Uncheck செய்து விடுங்கள்.



இனி இந்த மெனு தானாகவே தோன்றாது. இந்த மெனு தேவையெனில், மாற்றத்திற்கு தேவையான டெக்ஸ்டை தேர்வு செய்து வலது க்ளிக் செய்தால் போதுமானது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment