ரீமிக்ஸ் செய்ய 40 லட்சம் வீடியோக்கள்



Creative Commons என்பது (வீடியோ உள்பட) நம் படைப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான சேவையாகும். யூட்யூப் தளம் கடந்த ஆண்டு Creative Commons videos என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நாம் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களை மற்றவர்கள் பயன்படுத்தவும், மாற்றங்கள் செய்து வெளியிடவும் அனுமதி கொடுக்கலாம். இதற்கு Creative Commons Attribution licenseஎன்று பெயர்.

தற்போது யூட்யூப் தளத்தில் அது போன்று 40 லட்சம் வீடியோக்கள் இருக்கின்றன. அவைகளை நாம் இலவசமாக பயன்படுத்தி, மாற்றங்கள் செய்து, யூட்யூப் தளத்திலேயே வெளியிடலாம்.

இதனை செய்ய http://youtube.com/editor என்ற முகவரிக்கு செல்லுங்கள்.




அங்கே என்பதை கிளிக் செய்தால் இலவச Creative Commons வீடியோக்களை காட்டும். அவற்றில் ஒன்றையோ அல்லது உங்களுக்கு தேவையான வீடியோவை அங்கே தேடியோ பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வீடியோவை தேர்வு செய்து, அதனை இழுத்து (Drag) கீழே விடவும்.

பிறகு உங்கள் விருப்பம் போல அதனை எடிட் செய்யலாம். என்னென்ன வசதிகள் உள்ளதென்று அந்த தளத்திற்கு சென்றால் பார்க்கலாம். Edit செய்து முடித்த பிறகு மேலே வலது ஓரம் உள்ள வீடியோ Preview-கு மேலே வீடியோக்கு தலைப்பு கொடுத்து Publish என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment