வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்


alt
முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம். 
அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது.


Free Video Cutter இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம்
உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.

alt



இதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும். 

மிகவும் சிறிய அளவிலான எளிய மென்பொருள். உங்கள் மென்பொருள் தொகுப்பில் வைத்து கொள்ளுங்கள். USB/DVD மூலம் வேண்டுமென்ற இடத்திற்கு எளிதில் எடுத்து சென்று எளிதாக உபயோகித்து கொள்ள முடியும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment