வீடியோ மெயில் இலவசமாக அனுப்பலாம்

வீடியோ இமெயில் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
 
 
 
சில நேரங்களில் நாம் என்ன தான் இமெயில் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கேமிரா  மூலம் பேசி வீடியோ மெயிலாக உடனடியாக அனுப்பலாம்.
 
இணையதள முகவரி
 
இத்தளத்திற்கு சென்று நாம் படத்தில்  காட்டியபடி Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கேமிரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை  சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம். அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை  பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில்  யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் இமெயில் முகவரி மற்றும் நம் இமெயில் முகவரி, பெயர் , வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text  என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம், இங்கு கொடுத்திருக்கும் Notify me when this message read என்ற செக் பாக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு இமெயில் வரும். பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு  எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மீச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மெயிலாக தமிழ் மொழியிலே பேசி அனுப்புவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment