கூகுள் படங்களை பந்தாடலாம் வாங்க!



கூகுள் நிறுவனம் Easter Eggs என்ற பெயரில் அவ்வப்போது பல விளையாட்டுக்களை மறைத்து வைத்திருக்கும். தற்போதும் புதிய விளையாட்டை தனது பட தேடல் (Image Search) பக்கத்தில் வைத்துள்ளது. இதன் மூலம் படங்களை பந்தாடலாம்! :)

Atari Breakout:


Atari என்னும் நிறுவனத்தால் 1976-ஆம் ஆண்டு அறிமுகமான வீடியோ கேம், Breakout. இந்த விளையாட்டை நம்மில் பலர் பல விதத்தில் விளையாடியிருப்போம்.

எட்டு வரிசையில் கட்டங்கள் இருக்கும். கீழே ஒரு தட்டில் பந்து இருக்கும். அந்த பந்து மேலே உள்ள கட்டங்கள் ஒவ்வொன்றாக அழிக்கும். பந்து  கீழே வரும் போது சரியாக தட்டை அங்கு நகர்த்தினால் மீண்டும் மேலே சென்று கட்டங்களை அழிக்கும். இப்படி பந்தை தவறவிடாமல் அனைத்து கட்டங்களையும் அழிக்க வேண்டும். அப்படி அழித்தால் அடுத்த லெவலுக்கு போகும்.

இந்த விளையாட்டை தற்போது கூகுள் படத்தேடல் பக்கத்தில் வைத்துள்ளது.

கூகுள் பட தேடலில் "Atari Breakout" என்று தேடுங்கள், பந்து ஆடுங்கள்! 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment