மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் எனத் தெரிந்து அடிக்கும் ஆப்பிள்



Apple-iWork-logo
இதே போட்டி தான் தற்போது தொழில்நுட்ப நிறுவங்களுக்கு இடையே நிலவுகிறது.
தனி நபர்களுக்கும் , வணிக நிறுவனங்களுக்கும் தனது தயாரிப்புகளை விற்று வரும் போட்டியாளர்களான மைக்ரோசாப்ட் , கூகள், ஆப்பிள் ஆகிய மூன்று நிறுவனங்களும்  தனது போட்டி நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பு அல்லது முக்கிய துணை தயாரிப்பு மென்பொருளுக்கு போட்டியாக தானும் ஒரு மென்பொருளை வடிவமைத்து வெளியிடும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானத்தில் பெரும் பகுதி ஆபீஸ் மென்பொருள் விற்பனையில் இருந்தே வருகிறது. இதற்க்கு போட்டியாக கூகல் டாக்ஸ் என இணையத்தில் வேலை செய்யும் ஆபீஸ் போன்ற மென்பொருளை இலவசமாகக் கொடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த மைக்ரோசாப்ட் பிங் ( www.Bing.com ) எனும் தேடு பொறியை உருவாக்கி 30% மக்கள் (என்னையும் சேர்த்து தான்) கூகளை விடுத்து இந்த தேடுபொறியை பயன்படுத்துமாறு செய்தது.
கடந்த வருடம் தனது ஆபீஸ் மென்பொருள் ஆப்பிள் கணினிகளில் வேலை செய்யும் வகையில் வெளியிட்டது.  ஆப்பிள் கணினி வைத்திருப்போர் பொதுவாக அனைத்து மென்பொருள்களையும் பணம் கொடுத்து வாங்கும் “ரொம்ப நல்லவர்கள்” இதனால் தன் கோட்டையில் வந்து கொரளி வித்தை காட்டி மைக்ரோசாப்ட் பணம் சம்பாரிப்பதை விரும்பாத ஆப்பிள்., முழு சந்திரமுகியாக மாறி தனது iWork எனப்படும் ஆபீஸ் மாதிரியான மென்பொருளை இணையத்தில் கூகல் டாக்ஸ் போல இலவசமாக எவரும் பயன்படுத்தலாம் என அறிவித்து மைக்ரோசாப்ட் , கூகல் என இரண்டு நிறுவனங்களின் வருமானத்திற்கும் ஒரு சிறு தடையை ஏற்படுத்தியுள்ளது.
iWork மென்பொருள் பயன்படுத்த ஆப்பிள் ஐடி தேவை. இனி அந்த ஐடி நீங்கள் ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்தாதவராக இருந்தாலும் இனி இலவசமாக அதை உருவாக்கலாம். உங்களின் iWork கோப்புகள் iCloud மேகத் தளத்தில் சேமிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment