01. ஆண்ட்டி வைரஸ்
எனவே, மூன்றாவது நிலை நிறுவனங்களின் இலவச ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளை, இறக்கிப் பதிந்து அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த வகையில், இலவசமாகக் கிடைக்கும் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறப்பான வகையில் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. Avast Antivirus Free புரோகிராமும் இதே போல செயல்படுகிறது. எனவே இதனையும் பயன்படுத்தலாம். இதே போல, மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருவதாக, Malwarebytes AntiMalware Free என்ற புரோகிராம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புரோகிராம், புதிய மால்வேர்கள் இயங்கியத் தொடங்கிய முதல் நாளே அதனைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஆண்ட்டி வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களில் ஒரு புரோகிராம் மட்டுமே முழுமையான பாதுகாப்பினைத் தராது.
02. தேவையற்ற சாப்ட்வேர் நீக்கி நம் பெர்சனல் கம்ப்யூட்டரை நமக்கு விற்பனை செய்திடும் நிறுவனம், நமக்கு உதவுவதாகக் கூறி, பல புரோகிராம்களை, தேவை இல்லாமலேயே பதிந்து அனுப்பும். இவற்றை bloatware என அழைக்கின்றனர். இவற்றை நாம் எப்படி அறிந்து நீக்குவது? இதனை அறிந்து நமக்குப் பட்டியலிட, நமக்குக் கிடைக்கும் புரோகிராம் PC Decrapifier. இந்த சிறிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கினால், நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற புரோகிராம்கள் அனைத்தையும் பட்டியலிடும். பின்னர், நாமாக, தேவையற்றதை நீக்கிவிடலாம்.
03. அன்லாக்கர் புரோகிராம் ஒன்றை தேவையற்றது எனக் கருதி, அதனை அன் இன்ஸ்டால் செய்திட முயன்றால், நீக்கிட முயற்சி எடுத்தால், விண்டோஸ், இதற்கு ""உனக்கு அனுமதி இல்லை, புரோகிராம் பயன்பாட்டில் உள்ளது'' என நமக்குத் தடை போடலாம். அந்நிலையில் என்ன செய்வது? இந்த வகையில் உதவிட நமக்குக் கிடைக்கும் புரோகிராம் அன்லாக்கர் இதனை இயக்கினால், மறுக்கும் புரோகிராமினை வெட்டிச் சாய்க்கும் வகையில் உங்கள் முன் நிறுத்தும். பின் எளிதாக நீக்கிவிடலாம்.

0 comments :
Post a Comment