
பேஸ்புக் தளத்தால் ஆபத்து அதிகம் இருந்தாலும் நன்மைகளும் இருக்கத் தான் செய்கின்றன. இன்டர்நெட் சென்டரில் திருடியவர்களை சமீபத்தில் காட்டிக் கொடுத்துள்ளது பேஸ்புக். அது பற்றிய செய்தியினை இங்கே பார்ப்போம்.
கொலம்பியாவில் உள்ள களி (Cali) என்னும் நகரில் இன்டர்நெட் சென்டருக்கு சென்ற இரண்டு நபர்கள் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். சிறிது நேரம் கழித்து தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டி கடை உரிமையாளரிடமிருந்து பணத்தை திருடிக் கொண்டு சென்றுவிட்டனர்.
இன்டர்நெட் சென்டரின் நிர்வாகி திருடர்கள் பயன்படுத்திய கணினியை சோதித்த போது, அவர்கள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் Logout செய்ய மறந்துவிட்டதையும் கண்டுபிடித்தார். போலீஸ் வந்ததும் பேஸ்புக் பக்கத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு அவர்களை கைது செய்தது.
திருடனை பேஸ்புக் காட்டிக் கொடுத்தது இது முதல் முறை அல்ல. 2009-ஆம் ஆண்டு மேற்கு விர்ஜினியா நகரில் ஜொனாதன் பார்கர் என்னும் இளைஞன் ஒரு வீட்டில் சென்று இரண்டு வைர மோதிரங்களை திருடியுள்ளான். திருடச் சென்றவன் அங்குள்ள லேப்டாப்பில் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தியுள்ளான். ஆனால் Logout செய்யாமல் சென்றுவிட்டான். இதன் மூலம் அவனை கைது செய்தது போலிஸ்.
0 comments :
Post a Comment