பதிவர்களுக்கான பேஸ்புக் வசதி - Debugger



பேஸ்புக் லைக் பட்டன், பேஸ்புக் ஃபேன் பேஜ், பேஸ்புக் லைக் பாக்ஸ் என்று இணையதளம் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகளைத் தருகிறது பேஸ்புக் தளம். தற்போது நாம் பார்க்கப் போவது அதிகம் பேருக்கு தெரியாத பயனுள்ள பேஸ்புக் வசதி - Facebook Debugger.

சில சமயம் நமது பதிவுகளை பேஸ்புக் தளத்தில் பகிரும் போது தலைப்பு சரியாக வராது அல்லது படம் தெரியாது அல்லது வேறு பிழைகள் வரும். அப்படி வரும் போது அதனை சரி செய்ய பயன்படுவது தான் Facebook Debugger Tool.

மேலே சொன்ன பிரச்சனை வரும் போது 

https://developers.facebook.com/tools/debug என்ற முகவரிக்கு செல்லுங்கள்.


அங்குள்ள பெட்டியில் உங்கள் பதிவின் முகவரியை (ப்ளாக் முகவரியை அல்ல) கொடுத்து Debug என்று கொடுங்கள்.

பிறகு வரும் பக்கத்தில் பதிவின் பெயர், படம் எல்லாம் சரியாக காட்டும். பிறகு நீங்கள் பேஸ்புக்கில் முகவரியை பகிர்ந்தால் பிரச்சனை இருக்காது.

பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் பிழை:


நீங்கள் பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் வைத்திருந்தால் சில சமயம் மேலுள்ள படத்தில் உள்ளதுபோல் "Url is unreachable" என்று காட்டும். ஒரு முறை அதை க்ளிக் செய்தால் போதும். பிறகு காட்டாது.

அதை க்ளிக் செய்தால் பதிவில் சொன்ன Debug பக்கத்திற்கு தான் செல்லும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment