கணனி ஒன்றின் செயற்திறனை நிர்ணயிப்பதில் பிரதான நினைவகமாகக் கருதப்படும் RAM Memory-இன் பங்கு அளப்பரியதாகும்.
இவ்வாறான RAM Memory-களினை கணனியின் செயற்திறனை உயர்த்துவற்கு ஏற்றாற் போல் அதிகரிக்க முடியும்.
எனினும் குறித்த கணனியின் ஏனைய வன்பொருட் பாகங்கள் தொடர்பாக இதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
எனவே இது தொடர்பான விபரங்களை ஒன்லைனில் கண்டறிறும் வசதியை இணையத்தளம் ஒன்று தருகின்றது. அத்தளத்தில் காணப்படும் Crucial Memory Advisor tool எனும் அம்சத்தினைப் பயன்படுத்த முடியும்.
இது தவிர Crucial System Scanner எனும் மென்பொருளினையும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன் இதன் மூலம் ஏறத்தாழ 50,000 வகையான கணனிகளுக்கான 250,000 வகையான Upgrade-களினை தன்னகத்தே கொண்டுள்ளது.
இம்மென்பொருள் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் அப்பிளின் Mac OS ஆகியவற்றிற்கு தனித்தனியாகக் காணப்படுகின்றது.
For Windows - தரவிறக்க சுட்டி
For Mac OS - தரவிறக்க சுட்டி
0 comments :
Post a Comment