VLC Player இன் தோற்றத்தை (Skin) மாற்றுவது எப்படி?




கணிணியின் இயங்கு தளங்கள் பல இருந்தாலும் அது ஒவ்வொன்றுக்கும் பிரத்தியோகமான media player ஒன்று இருக்கும் . விண்டோவில் இயங்கு தளத்தில்  window media player  -ம் , மாக் இயங்கு தளத்தில் quick time player -ம் 
மற்றும்  லினக்ஸ்  பல  இயங்கு தளங்களில் vlc media player - ம்  இருக்கும் .vlc player  ஆனது கற்றற்ற  சுதந்திர மென்பொருள் .இது அனைத்து இயங்கு தளத்தில் இயங்குவது அதன் சிறப்பு .இதனை  நாம் கணிணியில்  நிறுவி பயன்படுத்தி இருப்போம் .இந்த vlc player  வைத்து இசை வட்டுகளையும் , திரைப்படங்களையும்  பார்க்க பயன்படுத்தி இருப்போம் .


    இதை தவிர FM எனப்படும்   பண்பலை வாயிலாகவும்  இசையை  கேட்டு  ரசிக்கலாம்.மற்றும்  திரைப்படம் , பாடல்கள்  போன்றவற்றை  நமக்கு  தேவை படும் அளவிற்கு வெட்ட பயன் படுத்தலாம் .பலவிதமான  கோப்புகளையும் (mp3,mp4,dvd,svcd) பயன்படுத்த ஆதரவு அளிக்கும்.இந்த vlc player   நல்ல அருமையான மென்பொருள் தரவிறக்கம் செய்து  அப்படியே பயன் படுத்தி கொண்டு இருப்போம் . அதன் தோற்றத்தை  பல விதமான  மாதிரிகளில்  மாற்றி பயன் படுத்தலாம் .vlc palyer- ன் புதிய பதிப்பான two   flower 2.0.8  -ஐ தரவிறக்கம்  செய்ய   சுட்டியை  சொடுக்கவும்.


   இந்த video LAN  தளத்தில்  vlc  > skin > download  க்கு சென்றால் பல விதமான தோற்றங்களை பார்க்கலாம் .நமக்கு  பிடித்த தோற்றத்தை தேர்வு  செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .தரவிறக்கம்  செய்ததை   தொகுப்பை கீழ்கண்ட வாறு சேர்த்து விடவும் .
 local disk (c)  > program files  > video LAN  > vlc  > skin இல்  சேமிக்கவும் . 

பிறகு vlc  media player திறக்கவும் .tools ஐ சொடுக்கி  preference (ctrl+p)தொகுப்பை  தேர்வு  செய்யவும் அல்லது  vlc  media player  மேல் சுலழியின் வலது பக்கம் சொடுக்கியும்  பெறலாம். இப்பொழுது  ஒரு சாரளம் திறக்கும்.இதில்  use custom  skin என்பதை  தேர்வு  செய்து  browse என்பதை சொடுக்கி ஏற்கனவே

 local disk (c)  > program files  > video LAN  > vlc  > skin

சேமித்து வைத்துள்ள  skin தேர்வு செய்து  பின்னர்  சேமித்து விடவும் .இப்பொழுது vlc player நீங்கள் விரும்பிய  தோற்றத்தில்  இருக்கும். பழைய படி  வேண்டும் என்றால்  interface settings > use native style என்பதை தேர்வு செய்து பெறலாம்.இந்த video LAN  தளத்தை தவிர ,பல தளங்களில் இருந்தும்    skin கிடைக்கும்.  எதையும் தரவிறக்கம் செய்த பின்  நல் anti -virus , malwarebytes anti -malware மென்பொருள் சோதனை செய்த பின் நிறுவுவது நல்லது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment