செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட்



பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. பேஸ்புக்கில் இது வரை கணினி, மொபைல்களில் இருந்து தான் பேஸ்புக் Status Update செய்திருப்போம். ஒரு மாறுதலுக்காக செவ்வாய் கிரகத்தில் இருந்து அப்டேட் செய்வோமா?

இது நகைச்சுவை விளையாட்டு. யாரும் அடிக்க வரக்கூடாது.

பொதுவாக நாம் மொபைல்களில் இருந்து பேஸ்புக் ஸ்டேடஸ்அப்டேட் செய்தால்via Mobilevia iPhonevia Blackberry என்று வரும். அதற்கு பதிலாக via செவ்வாய் கிரகம், via Nokia 1100via iPhone 5 என்பது போன்று Facebook Application நாமே உருவாக்கி செய்யலாம். எப்படி என்று இங்கு பார்ப்போம்.

முதலில் https://developers.facebook.com/apps என்ற முகவரிக்கு சென்று Create New App என்பதை கிளிக் செய்யுங்கள்.


பிறகு App Name என்ற இடத்தில் செவ்வாய் கிரகம்Nokia 1100iPhone5 போன்று உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கள்.

App namespace என்ற இடத்தில் ஆங்கிலத்தில் ஏதாவது கொடுங்கள். இது நீங்கள் உருவாக்கும் அப்ளிகேசனுக்கான முகவரி.

பிறகு continue என்பதை கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கான அப்ளிகேசன் உருவாக்கப்படும்.


பிறகு edit icon என்பதையும் இடது புறம் உள்ள படத்தையும் தனித்தனியாக கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த படத்தை அப்லோட் செய்யுங்கள். பிறகு கீழே உள்ளSave Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.


மேலே உள்ளது போல வரும். அதில் App ID என்ற இடத்தில் இருக்கும் எண்ணை காப்பி செய்துக் கொள்ளுங்கள்.

பிறகு பின்வரும் முகவரிக்கு செல்லுங்கள்.

https://www.facebook.com/dialog/feed?_path=feed&app_id=439268769418013&&redirect_uri=https%3A%2F%2Fwww.facebook.com&display=popup

மேலே உள்ள சிவப்பு கலரில் உள்ள எண்களை நீக்கிவிட்டு உங்கள் App IDஎண்களைக் கொடுக்க வேண்டும்.


மேலே உள்ளது போல வரும். பெட்டியில் ஏதாவது எழுதி கீழே உள்ள share என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment